தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல தேர்தல் தேதி அறிவிப்பாணை வெளியீடு

தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல தேர்தல் தேதி அறிவிப்பாணை வெளியீடு;

Update: 2025-06-21 03:09 GMT
தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் தேதிக்கான அறிவிப்பாணையை திருமண்டல நிர்வாகியும் முன்னாள் நீதிபதியுமான ஜோதிமணி வெளியிட்டுள்ளார். சி.எஸ்.ஐ. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல நிர்வாகிகளின் பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, திருமண்டலத்தின் அன்றாட பணிகளை கவனிக்கவும், திருமண்டல தேர்தலை நேர்மையாக நடத்திடவும், உயர்நீதிமன்றத்தால் கடந்த ஜனவரி மாதம் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகியாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஜோதிமணி பொறுப்பேற்றார்.  இதையடுத்து அவர் திருமண்டலத்தில் பல்வேறு பணிகளை கவனிக்க திருமண்டல மேலாளர், பொருளாளர், கல்லூரி செயலர்கள் மற்றும் பள்ளிகளுக்கு தாளாளர்களை நியமித்து செயலாற்றி வந்தார். இந்நிலையில் இன்று முன்னாள் நீதிபதி ஜோதிமணி தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கான தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து அந்த அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:- சி.எஸ்.ஐ. தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தை நிர்வகிக்கும் தொடர்புடைய துணை விதிகளை முழுமையாக ஆய்வு செய்து, தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்திற்கான தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இத்தேர்தலுக்கான ஆரம்ப பணிகள் ஜூலை 6ந் தேதி தொடங்குகிறது. இதற்கான செயல்முறைகளின் அச்சிடப்பட்ட அட்டவணை இம்மாதம் 27ந் தேதி அன்று வெளியிடப்படுகிறது.  இறுதி கட்டமாக நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் லே செயலாளர், பொருளாளர். துணைத் தலைவர், குருத்துவ செயலாளர் ஆகியோருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகளான ரெத்தினராஜ் மற்றும் ஜான் ஆர்.டி. சந்தோஷம் ஆகியோர் நியமிக்கப்படுவதாகவும் இன்று வெளியான அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

Similar News