தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி தேர்வு!

Update: 2025-06-21 04:31 GMT
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் உட்கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் தூத்துக்குடியில் உள்ள முஸ்லிம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது. தேர்தல் மாநில இளைஞர் அணி தலைவரும் தென் மண்டல பொறுப்பாளருமான ஜாரோன் குமார், மாநில ஊடகப்பிரிவுச் செயலாளர் ஜோதி குமார் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவிக்கு கிதர் பிஸ்மி வேட்புமனு செய்தார். நடைபெற்ற தேர்தலில் மீண்டும் மாவட்ட செயலாளராக கிதர் பிஸ்மி வெற்றி பெற்ார். தொடர்ந்து மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கிதர் பிஸ்பி க்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News