சேதமடைந்த மின்கம்பம் முறிந்து விழுந்து அசம்பாவிதம் நிகழும் முன்
புதிய மின்கம்பம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி மாதிரிமங்கலம் மாரியம்மன் கோயில் குளம் அருகில் உள்ள, மின்கம்பம் சாய்ந்த நிலையிலும், மின்கம்பத்தின் மேற்பகுதியில் சிமிண்ட் காறைகள் பெயர்ந்த நிலையிலும் உள்ளது. இதனால், காற்று சற்று வேகமாக வீசும் போது, மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் அறுந்து விழுந்து அசம்பாவிதம் நிகழும் அபாயமும் உள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகள், சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.