தென்காசி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
விவசாயி விஷம் குடித்து தற்கொலை;
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள நாணல்குளம் பகுதியை சார்ந்தவர் விவசாயி தமிழ்செல்வன் இவர் பிரஷர் மற்றும் சுகர் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இவர் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் விவசாயம் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.