புளியங்குடியில் பூர்ண கலா புஷ்பகலா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது
பூர்ண கலா புஷ்பகலா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது;
தென்காசி மாவட்டம்- புளியங்குடி சிந்தாமணி கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ வெற்றி விநாயகர், ஸ்ரீ பூர்ண கலா புஷ்பகலா சமேதா ஸ்ரீ தர்ம சாஸ்தா, ஸ்ரீ கொமண்டியம்மன், ஸ்ரீ நாகம்மன், ஸ்ரீ நொண்டி மாடன், ஸ்ரீ கொம்புமாடன், ஸ்ரீ தளவாய் மாடன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ பைரவர், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ புது வீட்டு அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஸ்ரீ கொமண்டியம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சங்கரன்கோவில் சிவ ஆகம பாஸ்கர ஈசான சிவாச்சாரியார் ஸ்ரீ கோமதி அம்மாள் சமேத ஸ்ரீ சங்கர லிங்க சுவாமி திருக்கோயில் ஸ்தானிகர் எஸ்.சாம்பசிவம் யாக பூஜையில் கடந்த மூன்று தினங்களாக விக்னேஸ்வர பூஜை புண்யாக வாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, திரவியா ஹுதி, பூர்ணா ஹுதி, தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது 5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.