தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கழுகுமலை வட்டத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகள் தேவி (65). திருமணம் ஆகாத இவா், மனநலம் பாதிக்கப்பட்டவராம். சங்கரன்கோவில்- கழுகுமலை சாலையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இத்தகவலறிந்த சங்கரன்கோவில் நகர காவல்நிலைய போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.