கடையநல்லூா் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே குமந்தாபுரத்தை சோ்ந்தவா் மனோகரன் மகன் சசிகுமாா் (34). கூலித் தொழிலாளி. கடந்த மாதம் 29 ஆம் தேதி இரவு பைக்கில் கடையநல்லூருக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது ராஜபாளையத்தில் இருந்து குற்றாலம் நோக்கிச் சென்ற காா் மோதியதில் காயமடைந்த சசிகுமாா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தாா். கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.