நாகை மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தொடக்கம்

கீழ்வேளுர், கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை;

Update: 2025-07-04 07:21 GMT
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை நாகை மாவட்டத்திலும் தொடங்கப்பட்டது.நாகை மாவட்டம் கீழையூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட  திருக்குவளை, எட்டுக்குடி உள்ளிட்ட பகுதிகளில், கீழ்வேளூர் தொகுதி பார்வையாளர் ரா.சங்கர், ஒன்றிய கழக செயலாளர் சோ.பா.மலர்வண்ணன் ஆகியோர் இணைந்து நேற்று பரப்புரையைத் தொடங்கி வைத்தனர். தமிழ்நாட்டின் உரிமைகள், மொழி, பண்பாடு மற்றும் நிதிநலன்களை புறக்கணிக்கும் பாஜக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்தும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. வாக்குச் சாவடி வாரியாக, வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து, தமிழகத்தை பாதிக்கும் பாஜக அரசின் கொள்கைகள் மற்றும் செயல்கள் குறித்து பிரசாரம் மேற்கொண்டனர்.இதேபோல, கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில், பிரதாபராமபுரம், விழுந்தமாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

Similar News