சங்கரன்கோவில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் பின்புறம் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனுக்கு வெளியே வைத்திருந்த கழிவு பிளாஸ்டிக் பொருட்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் அங்குள்ள பொதுமக்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதைக்கண்ட பொதுமக்கள் சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.