அக்கரைப்பட்டியில் புதிய பேருந்து நிழற்குடையை திறப்பு
புதிய பேருந்து நிழற்குடையை திறப்பு;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அக்கரைப்பட்டியில் வாய்ஸ் ஆஃப் தென்காசி பவுண்டேசன் சார்பாக புதிய பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு, இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இதில் வாய்ஸ் ஆஃப் தென்காசி பவுண்டேசன் நிறுவனர் திரு.ஆனந்தன் அய்யாசாமி, பஞ்சாயத்து தலைவி அண்ணாமலை அம்மாள் மற்றும் சண்முகச்சாமி திறந்து வைத்தனர். ஏற்பாடுகளை பவுண்டேசன் தலைமை செயல்அலுவலர் காருண்யா குணவதி மற்றும் தன்னார்வலர்கள் கருணாகர பவுன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.