சங்கரன்கோவிலில் வீடு வீடாக மக்களை சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடக்கம்
வீடு வீடாக மக்களை சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடக்கம்;
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி சங்கரன்கோவில் நகரம் 20- வது வார்டு பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் இயக்கம் என்ற திட்டத்தின் சார்பில் மக்களை நேரில் சந்தித்து தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி ஓரணியில் மக்களை இணைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம். எல்.ஏ. தலைமை தாங்கினார். தென்காசி ராணி ஸ்ரீகுமார் எம்.பி., முன்னாள் எம்.பி. தனுஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வீடு வீடாக சென்று பொது மக்களை சந்தித்து தி.மு.க. அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பொதுமக்களை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி மேற்கு நகர செயலாளர் அந்தோணி காய்பது அல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.