தென்காசியில் ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை நிகழ்ச்சி

ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை நிகழ்ச்சி;

Update: 2025-07-05 08:54 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மூலம் பேரிடர் மேலாண்மை போலி ஒத்திகை பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அனைத்து ஊழியர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தீயை அணைப்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, மாடிகளில் சிக்கியவர்களை மீட்பது, விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரசு ஊழியர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News