கடையத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை எம்எல்ஏ திறந்து வைத்தார்;

Update: 2025-07-06 08:05 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கடையம் வில்வவனநாதர் நித்திய கல்யாணி அம்பாள் கோவிலில் நாளை மறுநாள் 7ம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு புதியதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியை புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. அதனை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் தலைமையில் ரிப்பன் வெட்டி அப்பகுதி உள்ள பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் கடையம் பக்த ஜனசபா ராமன், ஒப்பந்ததாரர் கல்யாணி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Similar News