தளி அருகே அண்ணியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

தளி அருகே அண்ணியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை.;

Update: 2025-07-09 11:44 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள குமலாபுரம் கிராமத்தைச் சார்ந்த கோபால் இவரது அண்ணன் பிச்சையா (48) அண்ணி ரத்தினம்மா (48) அண்ணன் தம்பி இருவருக்கும் சொத்து தகராறு அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இதில் மீண்டும் தகராறில் ஆத்திரமடைந்த கோபால் அண்ணியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி கோர்ட்டில் வழக்கு நடந்து வந்த நிலையில் கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் நேற்று அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

Similar News