ஊத்தங்கரையில் எஸ்.பி.ஐ முன்பு மறியல்.
ஊத்தங்கரையில் எஸ்.பி.ஐ முன்பு மறியல்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் எஸ்பி.ஐ. வங்கி அலுவலகம் எதிரே அகில இந்திய பொது வேலை நிறுத்தம் சார்பாக தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடந்தது. இதில் விவசாய சங்கங்கள், மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் போன்றோர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்