கடலூர்: கேட் கீப்பர் சிறையில் அடைப்பு
கடலூரில் கேட் கீப்பர் சிறையில் அடைக்கப்பட்டார்.;
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் நேற்று (ஜூலை 8) காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மாணவ மாணவி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயலும் பொழுது கேட் போடாமல் இருந்தது உட்பட 5 பிரிவுகளில் காவல் துறையினர் பங்கஜ் சர்மா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.