கிருஷ்ணகிரி அருகே நடந்து சென்ற விவசாயி மீது கார் மோதி உயிரிழப்பு.

கிருஷ்ணகிரி அருகே நடந்து சென்ற விவசாயி மீது கார் மோதி உயிரிழப்பு.;

Update: 2025-07-10 00:12 GMT
கிருஷ்ணகிரி அருகே உள்ள கனகமுட்லு அடுத்த பத்திரிக்கான் கொட்டாயை சேர்ந்தவர் மாதையன் (56) விவசாயியான. இவர் கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் ஆவின் மேம்பாலம் அருகில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த கார் மாதையன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மாதையன் உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News