பாரூர் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்த ஆட்சியர், எம்.எல்.ஏ.
பாரூர் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்த ஆட்சியர், எம்.எல்.ஏ.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான காலவாய்களில் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 2397 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 2025ம் ஆண்டு ஜூலை 10 முதல் நவம்பர் மாதம் 16ம் தேதி வரை 130 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்காக இன்று காலை பாரூர் ஏரியின் மதகை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஆகியோர் மலர் தூவி திறந்து வைத்தனர்.