டூவீலர் மீது லாரி மோதியதில் வாலிபர் பலி

மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் வாலிபர் பலியானார்;

Update: 2025-07-11 06:22 GMT
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி என்ஃபீல்டு காலனியை சேர்ந்த வீரய்யா மகன் விஷ்ணு( 24 ) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று (ஜூலை .10) மதியம் 1மணி அளவில் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிட்டம்பட்டி டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த நத்தத்தை சேர்ந்த ராஜூ என்பவர் ஓட்டி வந்த லாரி இவரது இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் மோதியதில் கீழே விழுந்ததில் தலை, காது, முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.இது குறித்து அவரது தாயார் சியாமளா மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News