குளச்சல் அருகே கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (52). இவர் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த ரீகன் (32) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். மதுப்பழக்கம் உள்ள ரீகன் வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு செல்வராஜ் மகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். மனைவியை பிரித்து சென்றதால் மாமனார் மீது ரீகன் ஆத்திரத்தில் இருந்தார். சம்பவ தினம் மனைவி வீட்டுக்கு சென்ற ரீகன் அங்கு இருந்த மாமனார் செல்வராஜை தாக்கினார். இதனை தடுக்க வந்த செல்வராஜ் மூத்த மகனையும் மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். தாக்குதலில் காயம் அடைந்த செல்வராஜ் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் ரீகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.