குமரி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட விளம்பர பதாகைகளை வெளியிட்டதோடு, மேலும் உலக மக்கள் தொகை உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவக்கி, கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முடிவடைந்தது. நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கிளாரன்ஸ் டேவி, துணை இயக்குநர் குடும்பநலம் மரு.ரவிகுமார், சிலம்பாட்ட கலைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.