குமரி அரசு பள்ளிகளில் புதிய கட்டடங்கள் திறப்பு 

அம்மாண்டி விளை;

Update: 2025-07-12 03:45 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை, ஆரல்வாய்மொழி, ஆனைக்குழி அரசு மேல்நிலைப்பள்ளிகள், மற்றும் வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டடங்களை நேற்று  திறந்து வைத்தார். தொடர்ந்து அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்கள்.

Similar News