விவேகானந்தா கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கன்னியாகுமரி;

Update: 2025-07-12 09:09 GMT
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்ட ஸ்கந்தா இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கிடையே ஒருங்கிணைந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் டி.சி.மகேஷ் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் ஆர்.தர்மரஜினி வாழ்த்திப் பேசினார். கணிதவியல் துறைத் தலைவர் முனைவர் டி.ஜெயலட்சுமி மற்றும் தமிழ் துறைத்தலைவர் முனைவர் கே.இளங்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பயிற்சி மற்றும் பணியிடம் ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே.எம். திருநாவுக்கரசு அனைவரையும் வரவேற்றார். ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கே.கவியரசு ஒப்பந்தத்தின் சிறப்புகளை விளக்கினார். இந்த ஒப்பந்தத்தில் விவேகானந்தா கல்லூரியின் பிரதிநிதியாக கல்லூரி முதல்வர் முனைவர் டி. சி. மகேஷ் மற்றும் ஸ்கந்தா இன்டர்நேசனல் குழுமத்தின் பிரநிதியாக அதன் பொது மேலாளர் சந்தோஷ் ராம்குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி மற்றும் பணி ஏற்பாட்டுக் குழு செய்திருந்தது.

Similar News