இனயத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

எம்எல்ஏ - க்கள் பங்கேற்பு;

Update: 2025-07-12 14:37 GMT
குமரி மாவட்டம் தெற்கு கடற்கரை பகுதிகளில் ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தால் கடலை நம்பி வாழும் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் புதுக்கடை அருகே இனயம் கடற்கரை கிராமத்தில் நேற்று அப்பகுதி மீனவர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பொதுமக்களுடன் எம்எல் ஏ-க்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பட் மற்றும் குறும்பனை பெர்லின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News