குமரி அதிமுக பூத் முகவர்கள் கூட்டம்

ஆற்றூர்;

Update: 2025-07-12 14:42 GMT
குமரி மேற்கு மாவட்ட அதிமுக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஆற்றூரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்சன் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் சிவகுற்றாலம், துணைச் செயலாளர் மேரி கமலாபாய், இணை செயலாளர் அல்போன்சாள் ஆகியவர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளரும், குமரி மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான சின்னத்துரை கலந்துகொண்டு பேசுகையில், - ஒவ்வொரு பூத்திலும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் இருக்க வேண்டும். இதுவரைக்கும் நடந்த பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தை விட இன்று நடைபெற்ற கூட்டத்தில் தான் அதிக நிர்வாகிகள் கலந்து கொண்டதை பார்க்க முடிகிறது. குமரி மேற்கு மாவட்டத்தில் அதிமுகவினர் தற்போது எழுச்சியுடன் காணப்படுகின்றனர். மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் 818 பூத்துகள் உள்ளன. ஒவ்வொரு பேரூராட்சிகளிலும் 10 பூத்துகளாக பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் அதிமுக பாஜக கூட்டணிக்கு ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெற என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பூத் பொறுப்பாளர்களுக்கு தலைமை கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அதற்காக அனைத்து நிர்வாகிகளும் முழுமூச்சாக செயல்பட வேண்டும் என்று பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட அணி செயலாளர் மனோ, .சக்கிர் உசேன், ரஞ்சித் குமார் ஷைன்ஜோஸ், யூஜின் மாவட்ட பொருளாளர் சில்வஸ்டார் ,ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பேரூராட்சி ஊராட்சி, பூத் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News