குமரி மலையோர கிராமங்களான பேச்சிப்பாறை, தோலடி போன்ற பகுதிகளில் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார். அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் உரையாற்றினார். மேலும் தகுதியான பயனாளிகளுக்கு வன உரிமை சட்டத்தின் கீழ் உரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கு தேவையான மின்சார வசதி, சாலை வசதி, கலைஞர் கனவு இல்ல வீடுகள், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அனைத்து அரசு உதவிகளும் வழங்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பத்மநாதபுரம் சப் கலெக்டர் வினய்குமார் மீனா, வனத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.