"உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் முகாமினை பார்வையிட்ட ஆட்சியர்
மதுரையில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்;
மதுரை மாநகராட்சி 86 மற்றும் 87 வது வார்டு பகுதியில் இன்று (ஜூலை .17) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன், மேயர் இந்திராணி ஆகியோர் பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள். முகாமில் 15க்கும் மேற்பட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.