கோவையில் போதை மாத்திரை விற்பனை: நாகாலாந்து வாலிபர் கைது!
பெங்களூருவில் இருந்து போதை மாத்திரைகள் வாங்கி கோவையில் விற்ற நாகாலாந்து வாலிபரை கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.;
பெங்களூருவில் இருந்து போதை மாத்திரைகள் வாங்கி கோவையில் விற்ற நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்த லென்ஜாங்கம் என்ற வாலிபரை, கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்துள்ளனர். வடகோவை மேம்பாலம் பகுதியில் இளைஞர்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகத்துடன் ஒருவர் பிடிபட்டார். விசாரணையில் அவர் நாகாலாந்து மாநிலம் திமாபூர் பகுதியைச் சேர்ந்தவராகவும், வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டியாகவும் இருப்பது தெரியவந்தது. அதேபோல், பெங்களூர் மற்றும் மும்பையிலிருந்து குறைந்த விலையில் போதை மாத்திரைகள் வாங்கி, கோவையில் அதிக விலைக்கு விற்று வந்ததும் உறுதியாகியுள்ளது. இவரிடமிருந்து 36 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.