மதுரை அவனியாபுரத்தில் அன்னதானம் விழா .
மதுரை அவனியாபுரத்தில் அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது.;
மதுரை அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பால நாகஅம்மாள் திருக்கோவிலில் 36ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக 300 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இன்று காலை ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று ( ஜூலை.18)அம்மனுக்கு ஒன்பது மணிக்கு பால்குடம் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் அதனைத் தொடர்ந்து 4 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.