பெரியார் நூலகத்தில் கண் திருஷ்டி பொம்மை சர்ச்சை: அகற்றாவிட்டால் போராட்டம் எனத் த.பே.திரா.க கழகம் எச்சரிக்கை

கோவை காந்திபுரம் பகுதியில் தமிழக அரசு சார்பில் கட்டப்படும் தந்தை பெரியார் நூலகத்தில் கண் திருஷ்டி பொம்மை வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-07-20 07:09 GMT
கோவை காந்திபுரம் பகுதியில் தமிழக அரசு சார்பில் கட்டப்படும் தந்தை பெரியார் நூலகத்தில் கண் திருஷ்டி பொம்மை வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூட நம்பிக்கைக்கு எதிராக குரல் எழுப்பிய பெரியாரின் பெயரில் அறிவியல் மையம் அமைக்கப்பட்டிருக்க, கண் திருஷ்டி பொம்மை வைக்கப்பட்டிருப்பது தவறானது எனத் தந்தை பெரியார் திராவிட கழகம் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். இதை உடனடியாக அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News