தரமற்ற நியாயவிலைக் கடை: எம்.எல்.ஏ. ஆய்வு !

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார்.;

Update: 2025-07-20 07:40 GMT
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார். மின்சாரம், தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் குறைந்த அளவில் கட்டப்பட்டுள்ளதுடன், முன்னதாக இருந்த பெருமளவு தேக்க வசதியும் தற்போது இல்லை என எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார். மாவட்ட ஆட்சியரிடம் முன்பே புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கடை திறக்கப்பட உள்ளது என அறிந்து நேரில் ஆய்வு மேற்கொண்ட அவர், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஆட்சியரிடம் தொலைபேசியில் பேசினார். பின்னர், கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்து, கடையைத் திறக்க வேண்டாம் என உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News