கள்ளக்குறிச்சி நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை, அகில பாரத ஐய்யப்ப சேவா சங்கம், ஆர்ய வைசிய சங்கம், லயன்ஸ் சங்கம் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வாசவி மகாலில் ரத்த தான முகாம் நடந்தது.நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமாள், சந்திரசேகரன், அன்பரசு, அகில பாரத ஐய்யப்ப சேவா சங்க நிர்வாகிகள் அசோக்குமார், மனோகர், ஆண்டி, அரவிந்தன், ஆர்ய வைசிய சங்க நிர்வாகிகள் ஜெகநாதன், செயலாளர் தாமோதரன், ராகவன் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் முகாமை ஒருங்கிணைத்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கலெக்டர் பிரசாந்த் ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றி, ரத்த தானம் வழங்கினார்.