பூனை குட்டியை கவ்விச் சென்ற சிறுத்தை - துரத்திய நாய்: வைரலாகும் கண்காணிப்பு வீடியோ!
கோவை, தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.;
கோவை, தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில், உலியம்பாளையம் பகுதியில் சாலையோரம் இருந்த பூனை குட்டிகளை வேட்டையாட சிறுத்தை ஒன்று வந்தது. இதில் ஒரு பூனையை கவ்விக்கொண்டு சென்றது. பூனையின் சத்தம் கேட்டு, அருகில் இருந்த நாய் ஒன்று சிறுத்தையை துரத்தியது. இந்தக் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனத்துறையினர் கூண்டு வைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.