கோவை ராணுவ வளாகத்தில் பரபரப்பு: தண்ணீர் தொட்டியில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
கோவை ரெட்ஃபீல்ட் பகுதியில் உள்ள 110-ம் பட்டாலியன் ராணுவ முகாமில் வாலிபர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
கோவை ரெட்ஃபீல்ட் பகுதியில் உள்ள 110-ம் பட்டாலியன் ராணுவ முகாமில் நேற்று இரவு ஒரு வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சின்ன அந்தோனியார் கோவில் அருகிலிருந்து காம்பவுண்ட் சுவர் ஊடாக ராணுவ முகாமிற்குள் புகுந்த அவர், 60 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறி கத்தி, தற்கொலை செய்ய போவதாக கூறினார். தகவல் பெற்ற ராமநாதபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, பேச்சுவாதத்துக்குப் பிறகு அவரை பாதுகாப்பாக கீழிறக்கி மீட்டனர். விசாரணையில் அவர் நேரு நகர், முத்துச்சாமி காலனியைச் சேர்ந்த சரவணகுமார் என்பதும், போதையால் மனநலக்கேடு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது. குடிபோதையில் குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இவர் இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பது தெரியவந்தது. இவர் மனநல சிகிச்சைக்காக மருத்துவ காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.