கோவை: புத்தகக் காட்சியில் வைரமுத்து உரை: தமிழ் தலை நிமிர்ந்து நிற்கும்
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்று, தனது நூல்களுக்கு வாசகர்களிடம் கையொப்பமிட்டார்.;
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்று, தனது நூல்களுக்கு வாசகர்களிடம் கையொப்பமிட்டார். இதற்குமுன் அவர் புத்தக அரங்குகளை பார்வையிட்டு சில நூல்களையும் பெற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய வைரமுத்து, வாசகர்கள் வரிசையில் நிற்பது பார்க்கும்போது, தமிழ் இனி வரிசையில் நின்று வாழ போகிறது என்று தெரிகிறது. நான் தலைகுனிந்து கையெழுத்திடும் போது, தமிழ் தலை நிமிர்ந்து நிற்கும், என உணர்வுபூர்வமாக கூறினார். அத்துடன், திருவள்ளுவர் தமிழர்களின் ஒரே அடையாளம்; திருக்குறளை வாய்விட்டு வாசிக்க வேண்டும். அது தமிழுக்குள்ள நோய்களை போக்கும் என்றும் தெரிவித்தார்.