கோவை: அரிய வகை தவளை கண்டுபிடிப்பு!

கோவை-பாலக்காடு சாலையில் உள்ள சித்தூர் கிராமத்தில், 'உபெரோடான் டேப்ரோபானிகஸின்' (Uperodon taprobanicus) எனப்படும் அரிய வகை தவளை ஒன்று அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.;

Update: 2025-07-21 08:45 GMT
கோவை-பாலக்காடு சாலையில் உள்ள சித்தூர் கிராமத்தில், 'உபெரோடான் டேப்ரோபானிகஸின்' (Uperodon taprobanicus) எனப்படும் அரிய வகை தவளை ஒன்று அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் காணப்படும் இத்தவளை, மண்ணுக்குள் புதைந்து வாழும் இயல்பும், இரவில் மட்டுமே தோன்றும் தன்மையும் கொண்டது. இத்தவளை குறுகிய வாய் கொண்ட மைக்ரோஹைலிட் வகையைச் சேர்ந்ததாகும். மரங்களில் ஏறும் திறன் மற்றும் ஈரப்பதமுள்ள பகுதிகளில் வாழும் தன்மை இதற்கு உண்டு. இத்தவளையை கண்டறிந்த சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு உயிரியலாளர் அசோக சக்கரவர்த்தி கூறுகையில், 1990களுக்குப் பின் இத்தவளை வகையின் எண்ணிக்கை மிகக் குறைந்திருப்பதாகவும், தற்போது தமிழகத்தில் இது மிகவும் அரிதாகக் காணப்படுவதாகவும் தெரிவித்தார். ஈரநிலங்கள் குறைதலும், வெப்பநிலை உயர்வும் இவைகளின் வாழ்விடங்களை பாதிப்பதாகவும் கூறினார். இப்போது இத்தவளை மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதால், இதைமூலம் புதிய ஆய்வுகள் தொடங்கும் வாய்ப்பு உள்ளது.

Similar News