கோவையில் சாரல் மழை !
வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, கோவையின் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.;
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இன்று பாப்பநாயக்கன்பாளையம், காந்திபுரம், பீளமேடு, வடகோவை, உக்கடம், சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே லேசான சாரல் மழை இது வருகிறது. மழையால் பொதுமக்கள் குடை மற்றும் ரெயின் கோட் அணிந்து வெளியே சென்றனர். இதன் காரணமாக பகல் நேரத்தில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது.