தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் மாநாடு கோவையில் தொடக்கம் !

தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025, இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் (டி.இ.ஏ) ஆகியோர் இணைந்து, தமிழக அரசின் ஆதரவுடன் கோவையில் துவங்கியது.;

Update: 2025-07-22 09:03 GMT
தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025, இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் (டி.இ.ஏ) ஆகியோர் இணைந்து, தமிழக அரசின் ஆதரவுடன் கோவையில் துவங்கியது. தாய்வானைச் சேர்ந்த நிபுணர்கள், செயற்கை நூலிழை (MMF) மற்றும் தொழில்நுட்ப ஜவுளித்துறையில் சிறப்புரை நிகழ்த்தினர். நாளை திருப்பூரில் தொழில்துறை நிறுவனங்களுடன் தாய்வான் பிரதிநிதிகள் கலந்துரையாட உள்ளனர். துவக்க நிகழ்வில், சி.ஐ.ஐ, டி.இ.ஏ, தாய்வான் ஜவுளி கூட்டமைப்பு, மாவட்ட ஆட்சியர், தொழில் வளர்ச்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உரையாற்றினர். தமிழக தொழில் மற்றும் முதலீட்டுத் துறை செயலர் அருண் ராய், மாநிலம் மற்றும் தாய்வானுக்கு இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை பாராட்டி, அரசு முழு ஆதரவளிக்கும் என உறுதியளித்தார்.மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டனர். தாய்வானில் இருந்து துணி இறக்குமதி செய்து, தமிழ்நாட்டில் ஆடைகளாக மாற்றி ஏற்றுமதி செய்யும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இது முதல்கட்டமாக தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டு, எதிர்காலத்தில் இணைந்த தொழிற்சாலைகள் ஏற்பட வேண்டும் என்பதே நோக்கம் என தெரிவித்தனர். தமிழக அரசிடம் தொழிற்துறை நிபுணர்கள் ஆய்வு செய்து வழங்கிய 120 பக்க அறிக்கையின் பரிந்துரைகள் அரசால் விரைவில் பரிசீலிக்கப்படும் என கூறப்பட்டது.

Similar News