முத்துசாமி கொடுத்த பூங்கொத்தை நிராகரித்த செந்தில் பாலாஜி – வீடியோ, புகைப்படம் வைரல் !
அமைச்சர் முத்துசாமி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நினைவு பரிசாக பூங்கொத்து வழங்க முயன்றார். ஆனால், செந்தில் பாலாஜி அதனை நிராகரித்த வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.;
கோவை நீலாம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் முத்துசாமி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நினைவு பரிசாக பூங்கொத்து வழங்க முயன்றார். ஆனால், செந்தில் பாலாஜி அதனை நிராகரித்து, பிறர் கொடுத்த பூங்கொத்தையே ஏற்றுக் கொண்டார். இந்த செயல், முத்துசாமியை அவமதிப்பது போல் இருந்ததாக கருதப்படுவதுடன், சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்த காலத்தில், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டதை எதிர்த்து, இவர் இந்த வகையான செயலுக்கு மாறுபாடு தெரிவித்ததாக திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.