தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து எம்.எல்.ஏ. ஜெயராமன் கடும் கண்டனம் !

சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாக்கடை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை நேரில் பார்த்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.;

Update: 2025-07-24 07:30 GMT
கோவை, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அம்மா பேரவை இணை செயலாளர் கே.ஆர். ஜெயராம், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாக்கடை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை நேரில் பார்த்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். உப்பிலிபாளையத்தில் நேரில் பார்வையிட்ட அவர், அவர்களும் மனிதர்கள் தான். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாடு ஆரோக்கியமாக இருக்கும், என தெரிவித்தார். அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது எனக் கண்டித்தார். மேலும், கோவை மாநகராட்சி வரி வசூலில் மட்டும் கவனம் செலுத்தி, பாதுகாப்பு மற்றும் நலன்களில் பின்தங்கி வருவதாகவும், மக்கள் அதில் பெரும் வேதனை தெரிவித்துவருவதாகவும் கூறினார்.

Similar News