வாரிசு இல்லாததால் மனைவியின் நகை கையாடல் - ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் புகார்
தம்பதியருக்கு வாரிசு இல்லாததை அறிந்த உறவினர்கள் நகைகள் மற்றும் வீட்டுப் பொருட்களை திருடி இருப்பதாக புகார்.;
கோவை சுல்தான்பேட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முருகேசன், தனது மனைவி சாந்தினியின் 80 பவுன் நகைகள் வங்கி லாக்கரில் இருந்து உறவினர்கள் கையாடல் செய்ததாகவும், உயிருக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மனைவி சாந்தினியின் மரணம் சந்தேகத்திற்குரியது என்றும், வாரிசு இல்லாததை அறிந்த உறவினர்கள் நகைகள் மற்றும் வீட்டுப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.