புதுக்கோட்டை திலகர் திடலில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் தேர்தல் வாக்குறுதி எண் 311இல் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம்" வழங்க வேண்டி தமிழக முதல்வர் அறிவித்திருந்த நிலையில் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.