போலி லாட்டரி விற்ற வழக்கில் ஒருவர் கைது

குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-07-27 14:14 GMT
குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். கோட்டைமேடு, ஆலங்காட்டுவலசு பகுதியில் லாட்டரி விற்பது தெரியவந்தது. நேற்று இரவு 07:00 மணியளவில் நேரில் சென்ற போலீசார், போலி லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சஞ்சய், 32, என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து, போலி லாட்டரி டிக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

Similar News