இலவச கண் சிகிச்சை முகாம்
குமாரபாளையத்தில் சட்டப் பணிகள் ஆணைக்குழு தன்னார்வர்கள் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது;
குமாரபாளையம் சட்டப் பணிகள் ஆணைக்குழு தன்னார்வர்கள் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் வேதாந்தபுரம் சித்தி விநாயகர் கோயில் மண்டபத்தில் நடந்தது. சட்டப்பணிகள் ஆணைக்குழு தன்னார்வலர் தனபால், விடியல் பிரகாஷ் தலைமை வகித்தனர். அரசன் கண் மருத்துவமனை மருத்துவர் சுராஜ்குமார் மற்றும் குழுவினர் பரிசோதனை செய்தனர். முகாமில் 172 பேர் பங்கேற்றனர். இதில் 27 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 22 பேருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. முகாமில் பங்கு பெற்றவர்களுக்கு கண்ணில் புரை, உண்டாகுதல் மாறுகண், நீர் அழுத்த நோய், கிட்ட பார்வை, மற்றும் தூரப்பார்வை ஆகியவைகளுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்பட்டது. முகாமில் மாதேஸ்வரன், வேல்முருகன், மாதுகுமார்,மனோகரன், மணிகண்டன், சீனிவாசன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.