லாட்டரி விற்ற வழக்கில் ஒருவர் கைது
குமாரபாளையத்தில் லாட்டரி விற்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;
குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ். நடராஜன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். காவேரி நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் லாட்டரி விற்பது தெரியவந்தது. நேற்று மாலை 05:00 மணியளவில் நேரில் சென்ற போலீசார், வெளி மாநில லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சீனிவாசன், 57, என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து, வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.