சாலையில் மயங்கி விழுந்த முதியவர் பலி

குமாரபாளையத்தில் சாலையில் மயங்கி விழுந்த முதியவர் பலியானார்.;

Update: 2025-07-28 16:07 GMT
குமாரபாளையம் நகரில் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்தவர் மாதேஸ்வரன், 63. இவர் மூட்டை தூக்கி, அதில் வரும் வருமானத்தில், ஓட்டலில் சாப்பிட்டு, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தூங்கி வந்துள்ளார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், இவரது தம்பி, சிவா, 42, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். இவர் அங்கிருந்து மார்க்கெட் பகுதியில் வெளியில் வந்து மயங்கி விழுந்தார். இவரை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்க, சிகிச்சை பலனின்றி நேற்று காலை 08:00 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News