கோவில்களில் ஆடி மாத சிறப்பு வழிபாடுகள்

குமாரபாளையம் கோவில்களில் ஆடி மாத சிறப்பு வழிபாடுகள் நடந்தன.;

Update: 2025-07-28 16:10 GMT
ஆடி மாதத்தையொட்டி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் தினமும் நடந்து வருகிறது. குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன. இதே போல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், தேவாங்கர் மாரியம்மன் கோவில், 24 மனை மாரியம்மன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், கத்தேரி சமத்துவபுரம் அருகே உள்ள சிவபுரம் சிவன் கோவில், கள்ளிபாளையம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அம்மன் சுவாமிகள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Similar News