பொது மக்களின் புகார்களுக்கு உடனடி தீர்வு

பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பகுதி மக்கள் குறைகளை நேரில் சென்று தீர்வு காணும் பொறுப்பாளர்;

Update: 2025-08-01 12:37 GMT
நாமக்கல் மேற்கு மாவட்டம் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் குப்பாண்டபாளையம் ஊராட்சி ஜெயலட்சுமி நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தருமாறு அப்பகுதி பொதுமக்கள் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் .நாச்சிமுத்து அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அப்பகுதிக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்து மிக விரைவில் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார் அதேபோல் குப்பாண்டபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பூலக்காடு ரோடு காந்திநகர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளதாகவும் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு காணுமாறு அப்பகுதி பொதுமக்கள் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து மிக விரைவில் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி தருவதாகவும் உறுதியளித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினரும்,மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளருமான திரு.M.R.ராஜேந்திரன் அவர்கள் உடன் இருந்தார்....

Similar News