வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா
குமாரபாளையம் வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா நடந்தது.;
குமாரபாளையம் ஓலப்பாளையம் விநாயகர் மற்றும் வீரமாத்தியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடந்தது. காவிரி ஆற்றிலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வீரமாத்தியம்மன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்து வர, பெருமளவிலான பக்தர்கள் மஞ்சள் ஆடையுடன் தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். விநாயகர் மற்றும் வீரமாத்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்ற பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வணங்கினர். கோவில் வளாகம் முழுதும் மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள், வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆன்மீக சொற்பொழிவுகள், பக்தி இசை நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.