தனுஷ் பிறந்த நாள் கொண்டாட்டம்
குமாரபாளையத்தில் நடிகர் தனுஷ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையத்தில் நடிகர் தனுஷ் பிறந்த நாள் விழா நகர தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. சத்யாபுரி முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் தனுஷ்பாபு, மாவட்ட செயலர் கலை முருகேசன், கவுன்சிலர் ஜேம்ஸ், துணை செயலர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.